75 கோடி சம்பளத்துடன் ஆடம்பர வாழ்கை!! -அத்தனையையும் விட்டு துறவியான முகேஸ் அம்பானியின் வலது கையளர்-
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் ஊதியம் பெற்ற உயர் அதிகாரி ஒருவர் ஆடம்பர வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் துறந்து ஜைன மத துறவி ஆகி உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஸ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஸ் சா அந்நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இருந்தே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார்.
கடந்த 25 ஆம் திகதி வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா சாவும் துறவறம் பூண்டுள்ளார். ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் 75 கோடி ரூபாயாகும்.
இவரது ,ளையமகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனது 24 வது வயதில் ஜைன துறவியானது குறிப்பிடத்தக்கது.