கொரோனாவையே நிலைகுலைய வைத்த வயோதிப தம்பதியினர்!!

ஆசிரியர் - Editor II
கொரோனாவையே நிலைகுலைய வைத்த வயோதிப தம்பதியினர்!!

இந்தியாவின் மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளை முறியடித்து 105 வயது முதியவர் அவரது 95 வயது மனைவி முழுமையாக குணமடைந்து உள்ளனர்.

மராட்யத்தின் லத்தூர் மாவட்டத்தில் தேனு உமாஜி சவான் (வயது 105), மோதாபாய் தேனு சவான் (வயது 95) என்று தம்பதி கடந்த மார்ச் 25 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் கடந்த 4 ஆம் திகதி சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களுடைய அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், 100 வயதினை எட்டிய இதுபோன்ற முதியவர்கள் குணமடைந்து திரும்புவது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துகிறது.