உலகின் தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா இருக்கும்!! -ஜோ பைடன் சூளுரை-
உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரசுக்கு எதிரான போட்டத்தில் அனைத்து நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் களஞ்சியம் ஆக அமெரிக்கா விளங்கும் என்று ஜனாதிபதி பைடன் சூளுரைத்துள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இன்று வியாழக்கிழமை உரையாற்றும்பொதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்:-
கொரோனா பெருந்தொற்று நம்மை தற்பொழுது சூழ்ந்துள்ளது. எந்த வைரசையும் தள்ளி வைக்கும் அளவிற்கு பெரிய தடுப்பு சுவர் எதுவும் இல்லை. நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தடுப்பூசி வினியோகம் வளர்ச்சி கண்டு வருகிறது. அவற்றை நாம் செயல்படுத்தி வருகிறோம்.
2 ஆம் உலக போரில் ஜனநாயகத்தின் களஞ்சியம் ஆக அமெரிக்கா திகழ்ந்தது. அதேபோன்று பிற நாடுகளுக்கான தடுப்பூசி வழங்கும் களஞ்சியம் ஆக அமெரிக்கா திகழும் என்றார்.