SuperTopAds

உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானத்தின் சேவை நிறுத்தப்பட்டது!! -இலாபம் இல்லாததே காரணமாம்-

ஆசிரியர் - Editor II
உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானத்தின் சேவை நிறுத்தப்பட்டது!! -இலாபம் இல்லாததே காரணமாம்-

உலகின் மிகப்பெரிய குளோபல் சூப்பர் டேங்கர் விமானத்தின் சேவை, போதிய இலாபம் இல்லாத காரணத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உருவத்திலும், கொள்ளளவிலும் பிரமாண்டத்தை கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானமான போயிங் 747-400 சூப்பர் டேங்கரை 400 முதல் 800 அடி வரை தாழ்வாக இயக்கமுடியும்.

தீயணைப்பு பணிக்காக இந்த சூப்பர்டேங்கர் விமானம் கடந்த ஆண்டு மட்டும் 119 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விமானத்தின் மூலம் 74 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். கடந்த 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பொலிவியாவில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றிய குறித்த விமானத்தால், பெரிய அளவில் இலாபம் இல்லை எனக்கூறி அதன் சேவையை நிறுத்திவைக்க முடிவுக்கு செய்துள்ளதாக முதலீட்டு நிறுவனமான ஆல்டர்னா கேபிடல் பார்ட்னர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.