தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் அரைவாசி குறைகிறது!! -ஆய்வில் புதிய தகவல்-
தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா தொற்று பரவல் அரைவாசி குறைகிறது என்று இங்கிலாந்தில் நடந்த புதிய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், இத்தொற்று பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய பொது சுகாதார ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் மூலம் கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைகிறது. ஆக்ஸ்போர்டு- ஆஸ்ட்ராஜெனகா, பிசர்-பயோன்டெக் ஆகிய எந்த தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ போட்டவர்களுக்கும் இது பொருந்தும்.
அதேபோல, தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்கு பின் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது, அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் ஆய்விலிருந்து மேலும் தெரியவந்திருக்கின்றன.