SuperTopAds

முன்னாள் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரது சகோதர ரின் கைதுகளுக்கு கவலையும் அளிக்கின்றது

ஆசிரியர் - Editor III
முன்னாள் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரது சகோதர ரின் கைதுகளுக்கு கவலையும் அளிக்கின்றது

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் நிறைவடைந்து  இரண்டாண்டுகள் முடிந்தும் இந்நாட்டில் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுடன் தற்போதைய  அரசியல் சலசலப்புக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் கைதாகியுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை மற்றும் கருப்புப்பட்டி அணிந்து சமூகமளித்திருந்த சபையின் முன்றலில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இதன் போது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தனர்

சி.எம்.முபீத்( அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-   கல்முனை மாநகர சபை உறுப்பினர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பயங்கரவாத தடுப் புச்சட்டத்தின் கீழ்  மிலேச்சத்தனமான முறையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது இன்றைய வங்குரோத்து அரசி ன் திட்டமிட்ட அரசியல் சதியாகும் .

முன்னாள் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரது சகோதர ரின் கைதுகளுக்கு கவலையும் அளிக்கின்றது.  இன்றைய கோத்தாபய அரசில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை கேள்விக்குறியாகியுள்ளது .ஒரு உண்மையை மறைப்பதற்காக ஆயிரம் பொய்களை இந்த அரசாங்கம் கூறிவருவதுடன்  பல கைதுகளையும் தான்தோன்றித்தனமாக முன்னெடுத்து வருகின்றது .

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியை இனங்காட்ட வக்கில்லாத அரசு ,சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக ஈஸ்டர் 21 எனும் படத்தை ஓட்டிவருகின்றது . இத்திரைப்படத்தின் ஓர் அங்கமாகவே முன்னாள் அமைச்சர் எம் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதும் தடுப்புக்காவலும் அமைந்துள்ளது . சபாநாயகரின் அனுமதியோ எத்தகைய நீதிமன்ற பிடியாணையோ இன்றி நடுநிசியில்  கதவை உடைத்து உள்நுழைந்து அநாகரியமான  அடாவடித்தனமான முறையில் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தலைவர் ரிஷாத்தை கைது செய்து சென்றமை பெரும் வருத்தத்துக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் .

  நாட்டில் சட்டமும் , ஜனநாயகமும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டள்ளது என்பதையே இக்கைதுகள் புலப்படுத்துகின்றன . அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கும் . நம்பிக்கையும் சரிந்து கொண்டிருக்கும் நிலமையைச் சரி செய்யவே இப்பொழுது நாட்டில் ஏப்ரல் 21 படத்தை அரசு ஓட்டிக் கொண்டி ருக்கின்றது ,சர்வதிகார ஆட்சியும் தொடர்கிறது . கடந்த பொதுத் தேர்தலில் தமக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வில்லை என்ற வேட்கையில் அரசு பழிவாங் கல்களை முன்னெடுத்து வருவதன் திட்மிட்ட ஓர் அரசியல் பழிவாங்கல் செயற்பாடே தலைவர் ரிஷாத்தின் கைதாகும் .

  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இப்படியொரு இனவாதியாக முகத்தைக் காட்டுவாரென நான் எதிர்பார்க் கவில்லை . 2010 ஆம் ஆண்டு அவருக்காக நானும் தேர் தல் பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டியமைக்காக நான் வெட்கித்தலை குனியும் நிலையிலுள்ளேன் . தலைவர் ரிஷாத் பதியுன் விடுதலை செய்யப்படவேண்டும் அவரது அநியாயக்கைதுக்கு நீதி கிடைக்க  வேண்டும் . அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நீதி இ நியாயம் வேண்டிநிற்பார் பாடு படவேண்டும் என்றார்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)

அரசியல் சலசலப்புக்களுக்கு தலைவர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் பலியிடுகிறதுஈஸ்டர் தாக்குதல் முடிந்து இரண்டாண்டுகள் முடிந்தும் இந்நாட்டில் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் அரசியல் சலசலப்புக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் மையப்படுத்தி பழிவாங்குவதை இந்த நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் கைது  கண்டிக்க தக்கது.

இந்த நாட்டில் மலிந்துள்ள ஊழல்கள்இ முறைகேடுகளை மறைக்க முன்னாள் அமைச்சர் றிசாத் அவர்களையும்இ அவர்களின் குடும்பத்தினர்களையும் அநியாயமாக கைது செய்கிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயம்இ தனிமனித உரிமைகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மாத்திரமின்றி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவரின் சிறப்புரிமையை இல்லாமலாக்கி கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பி.எம் .ஷிபான்(கல்முனை மாநகர சபை உறுப்பினர்-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)

கத்தோலிக்கர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கர்த்தினல் குழம்புகிறார்.அரசாங்கமும் கர்த்தினல் மல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்களும் சங்கடத்துக்குள்ளான நிலமையை மீளச்சரி செய்யவே தலைவர் றிஷாட் பதியுதீன் கைது இடம்பெற்றிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு வருடம் பூர்த்தி அன்று கார்த்தினால் நிகழ்த்திய அனுதாப உரையினால் அரசாங்கம் பெரும் சங்கடத்துக்குள்ளாகியது. அன்றைய தினம் அனைத்து ஊடகங்கங்கள் வாயிலாகவும் கர்த்தினால் ஈஸ்டர் தாக்குதலுக்கு மறைமுகமாக அரசாங்கத்தை சாடியதையே பகிர்ந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதை விட ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளஇ கைப்பற்றிக்கொள்ள ஒரு தரப்பினரால் செய்யப்பட்டதென்றே அவர் தெரிவித்திருந்தார். அதே நாள் சமூக ஊடகங்களிலே பரவலாக காணப்பட்ட பின்னூட்டங்கள் யாவும் 'கார்த்தினால் அவர்களே இப்பொழுதா உங்களுக்கு விளங்கியுள்ளது' என பதியப்பட்டிருந்தது .

 அரசாங்கம் பெரும் சங்கடத்துக்குள்ளாகிய நாளாகவே அன்றைய தினம் பேசப்பட்டது. பலரது பார்வையில் கர்த்தினலுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் உள்ள நல்ல உறவு அறுந்து விட்டதாகவே வியாக்கியானம் செய்யப்பட்டது.  எனினும் அரசாங்கம் இது தொடர்பில் நிச்சயமாக கர்தினலை அணுகியிருக்கும் என்பதே பலரது ஊகம். அதனை உண்மை படுத்தும் விதத்திலேயே மறு நாளே கார்த்தினால் செய்தியாளர் மாநாட்டை கூட்டி பல்டி அடித்தார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட நிலைமை கர்தினாலுக்கும் இடம்பெற்றிருக்குமா எனவும் ஊகிக்க வேண்டியுள்ளது என்றார்.

 பஸீரா றியாஸ்(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-  கல்முனை மாநகர சபை உறுப்பினர்)

அரசாங்கம் அண்மைக்காலமாக முஸ்லீம்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.அதில் ஒன்றாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் மையப்படுத்தி பழிவாங்குகிறது.இது தவிர ஜனாசா விடயத்திலும் இவ்வாறு இடம்பெற்றிருந்தது.எனவே இந்த செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

 மேலும்  கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  புதன்கிழமை (28)  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர்இ சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை மற்றும் கருப்புப்பட்டி அணிந்து சமூகமளித்திருந்ததுடன் கண்டன உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது