புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!! -தொடரும் ரோயல் சேலஞ்சர்சின் அதிரடி-

ஆசிரியர் - Editor II
புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!! -தொடரும் ரோயல் சேலஞ்சர்சின் அதிரடி-

ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலிடம் வகிக்கிறது.

நேற்று நடைபெற்ற 22 ஆவது ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெங்களூரு அணி பிடித்துள்ளது. 

6 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது, 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு