SuperTopAds

வடமாகாணம் இப்போதும் பேராபத்தை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது..! பயண கட்டுப்பாடு இல்லாமையே பிரதான காரணம், பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக உள்ளோம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் இப்போதும் பேராபத்தை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது..! பயண கட்டுப்பாடு இல்லாமையே பிரதான காரணம், பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக உள்ளோம்..

நாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயகரமான முறையில் பரவிவரும் நிலையில் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு ஒட்சிசன் தேவை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது. 

இந்நிலையில் வடமாகாணத்தில் தற்போது அவ்வாறான பாரிய ஆபத்தான நிலை இல்லாதபோதும் நாட்டில் பயண கட்டுப்பாடுகள் எவையும் நடைமுறையில் இல்லை. என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும். 

என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால கொரோனா நிலமை தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

அதனால் தொற்று பரவும் ஆபத்து எப்போதும் உள்ளது. அவ்வாறு ஆபத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பம் எழுந்தால் வடமாகாணம் அதற்கு தயாராக இருக்கின்றது. 

குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை வைத்தியசாலை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை ஆகிய 4 வைத்தியசாலைகளில்

ஒட்சிசன் மீள் நிரப்பு நிலையங்கள் உள்ளது. தற்போது அவை தயார்ப்படுத்தப்பட்டிருப்பதுடன், வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில்

செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகளுடன் கூடிய(வென்டிலேட்டர்) படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. என அவர் மேலும் கூறியுள்ளார்.