"மண்டேலா" திரைப்படத்தை வடமாகாணத்தில் திரையிட்டால் போராட்டம்..! சிகை அலங்கரிப்பாளர்கள் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

அண்மையில் வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை நீக்கவேண்டுமென  வடமாகாண அழகக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தென் இந்தியாவில் வெளிவர  இருக்கும் மண்டேலா திரைப்படமானது அழகக்  கலையில் ஈடுபடுவோரை 

கொச்சைப்படுத்தும் முகமாகவும் அவர்களின் தொழிலை 30 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் முகமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தென்னிந்தியாவில் போராட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே நாமும் மண்டேலா திரைப்படத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதோடு திரைப்படமானது இலங்கையில் திரையிடும் போது எமது தொழிலை இழிவுபடுத்தும்  

காட்சிகளை நீக்காவிட்டால் நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு