SuperTopAds

வாய் மூலம் ஒட்சிசன் கொடுத்து கணவரின் உயிரை காப்பாற்ற போராடிய மனைவி!!

ஆசிரியர் - Editor II
வாய் மூலம் ஒட்சிசன் கொடுத்து கணவரின் உயிரை காப்பாற்ற போராடிய மனைவி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கணவனை காப்பாற்ற, அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி ஒட்சிசன் கொடுத்து போதும், கணவரின் உயிரை மனைவியால் காப்பாற்ற முடியத சோகச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

தற்போது கணவரின் உயிரை காக்க போராடிய பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆட்டோ மூலம், சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு ரேணு அழைத்து வந்திருந்தார்.

ரவியின் உடல்நிலை மேலும் மோசமாக, வைத்தியசாலைக்கு செல்லும் வழியில், ஆட்டோவில், தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஒட்சிசன் கொடுத்தார்.

ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த ரவி உயிரிழந்தார்.