யாழ்.மாவட்டத்தில் தீவிரமான கொரோனா பரவல் இல்லை என்பதற்காக ஆபத்து இல்லை என கூற முடியாது..! தற்போது பரவும் வைரஸ் மிக ஆபத்தானது. மாவட்ட செயலர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தீவிரமான கொரோனா பரவல் இல்லை என்பதற்காக ஆபத்து இல்லை என கூற முடியாது..! தற்போது பரவும் வைரஸ் மிக ஆபத்தானது. மாவட்ட செயலர் எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் தீவிரமான கொரோனா தொற்று இல்லையென்றபோதும் ஆபத்தான நிலை இப்போதும் உள்ளதென மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்.மாவட்டத்தில் சுமார் 1200 போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தேசிய கொவிட் செயலணி தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான கட்டுப்பாடுகள் தொடர்பில் 

அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனை யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி திணைக்களங்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களங்களுக்கு உரிய 

அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பரப்புகின்ற கொரோனா வைரஸ் ஆனது காற்று மூலம் அதிகளவில் பரவுவதாக சுகாதார தரப்பினர்கள் அச்சம் வெளியிடும் நிலையில் 

பொதுமக்கள் தேவையற்ற போக்குவரத்துக்களை தவிர்ப்பது நல்லது.ஆகவே பாடசாலைகள் அனைத்தும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் 

அனைவரும் சுகாதார நடைமுறைகளை உரியமுறையில் பின்பற்றாவிட்டால் எதிர்வரும் நாட்களில் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு