உலகக்கிண்ணத் தொடரில் வாய்ப்புக் கிடைக்கும் தீவுகளின் சகலதுறை வீரர் பிராவோ நம்பிக்கை
‘‘இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்’’ என்று தனது நம்பிக்கையை வெளிப் படுத்தினார் மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ.
நடப்பு வருட ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவதற்காக அந்த அணியுடன் நேற்று முன்தினம் இணைந் தார் பிராவோ. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘‘அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாதது என்பது பிபா உலகக் கிண்ணத் தொடரில் இத்தாலி இல்லாமல் இருப்பது போன்றே இருக்கும்.
எந்த ஒரு அணிக்கும், அல்லது ஒரு நாட்டுக்கும் எதுவும் உத்தரவாதம் இல்லை. தற்போதைய அணி இளம் அணி. கிரிக்கெட் உலகம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பார்க்க விரும்புவதுடன், சிறந்த போட்டியையும் காண விரும்புகிறது. அவர்கள் சிறப்பாக செயற்பட நான் வாழ்த்துகிறேன். உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை நான் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது என்னை பொறுத்தவரையில் வீட்டுக்கு திரும்பியிருப் பது போன்றதாகும். கடந்த இரு வருடங்களாக நாங்கள் ஐபிஎல் தொடரை தவறவிட்டோம். ஐபிஎல் ஏலத்தை ஆஸ்திரேலியாவில் இருந்தபடி தொடர்ந்து கவனித்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணி நிர்வா கத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
எங்கள் அணியானது உலகிலேயே சிறந்த தலைவரால் வழிநடத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரையில் சென்னை அணி அதிகம் சாதித்துள்ளது. மஞ்சள் ஆர்மியை மகிழ்விக்க விரும்பு கிறேன்.
இந்தத் தொடரில் எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. அதிக அனுபவம் வாய்ந்த அணியையே நாங்கள் கொண்டுள்ளோம். வற்சன், ஜடேயா, டோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்’’ என்று பிராவோ மேலும் தெரிவித்தார்.