யாழ்.மாவட்டத்தில் திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா..? ஆய்வுக்காக மாதிரிகள் அனுப்பபட்டுள்ளதாக பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா..? ஆய்வுக்காக மாதிரிகள் அனுப்பபட்டுள்ளதாக பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் திரிபடைந்த கொரோனா வைரஸ் பரவல் உள்ளதா? என்பதை ஆராய்வதற்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைகழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் சுகாதார நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி இன்று காலை கூடியிருந்தது. கலந்துரையாடலிலேயே மாகாண சுகாதார பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் அவர் கூறுகையில், 

நாட்டில் திரிபடைந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில் அவ்வாறான ஆபத்து யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டிருக்குமா? என்பதை அறியவதற்காக விசேட பரிசோதனைகளுக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்திற்கு சில மாதிரிகள் அனுப்பபட்டுள்ளது. 

அவற்றின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்பே நாங்கள் அது குறித்த தகவல்களை வெளியிடுவோம். என்றார். மேலும் மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இனினும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள தவறினால், 

மீண்டும் ஒரு முடக்கத்தை மக்கள் அனுபவிக்க நோிடும் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு