இந்தியாவில் மே மாதம் 15 ஆம் திகதிக்குள் கொரோனா உச்சம் தொடும்!! -விஞ்ஞானிகள் துல்லிய கணிப்பு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் மே மாதம் 15 ஆம் திகதிக்குள் கொரோனா உச்சம் தொடும்!! -விஞ்ஞானிகள் துல்லிய கணிப்பு-

இந்தியாவில் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கொரோனா உச்சமடைந்து 35 இலட்சம் வரையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையத்தொடங்குவதற்கு முன்னர் அடுத்த மாதம் மத்தியில் மேலுமு; கூடுதலாக 10 இலட்சம் அளவுக்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கான்பூர் ஐ.ஐ.டி., ஐதராபாத் ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அப்போது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 இலட்சம் வரை உயரும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 

ஏப்ரல் மத்தியில் இருந்து மே மத்திக்குள் கொரோனா உச்சம் தொடும். ஒரு மிக துல்லியமான கணிப்பு, கொரோனா 5 நாளில் உச்ச நிலைக்கு போய் விடலாம் என்றும் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.