நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக இயக்குனர்!! -நடிகை பரபரப்பு தகவல்-
தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக டி.வி நடிகை ஒருவர் துணை இயக்குனர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். இப்போது விவாகரத்து செய்யத உள்ளேன்.
இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை ஊட்டினார்.
என்னை மிரட்டி அரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்தார். அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார். அடித்து துன்புறுத்தினார். அவர் மீது மணலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தேன். பொலிஸ் அவரை கைது செய்தது. ஆனால் அவர் பிணையில் வந்துவிட்டார்.
வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். என்னை அரைநிர்வாணமாக எடுத்த படங்களை அவரிடம் இருந்து பொலிஸார் மீட்டுத் தரவேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.