SuperTopAds

யாழ்.கைதடி அரச திணைக்கள ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உட்பட இன்று யாழ்.மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி அரச திணைக்கள ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உட்பட இன்று யாழ்.மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 636 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேலும் 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும், 

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் (இவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளான அரச திணைக்கள ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள்)

நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.