இந்திய பெண்ணுக்கு அமெரிக்காவில் பதவி!!
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 45 வயதான வனிதா குப்தாவை என்பவர் அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்க அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அவர் சமூக உரிமைகள் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவில் தலைச்சிறந்த வழக்கறிஞராக அவர் உள்ளார். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது அவர் உதவி அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக, வனிதா குப்தாவை நியமித்தார்.