SuperTopAds

கொரோனா சிகிச்சை விடுதியில் திடீர் தீவிபத்து!! -13 நோயாளிகள் உடல் கருகி பலி-

ஆசிரியர் - Editor II
கொரோனா சிகிச்சை விடுதியில் திடீர் தீவிபத்து!! -13 நோயாளிகள் உடல் கருகி பலி-

இந்தியாவின் - மகாராஸ்டிராவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஸ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. நேற்று மட்டும் 67 ஆயிரம் பேர் புதிதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு 568 பேர் கொரோதனால் உயிரிழந்துள்ளனர். 

இதனால் அங்குள்ள அனைத்து வைத்தியசாலைகளும் நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. 

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அம் மாநிலத்தின் நாசிக்கில் கொரோனா வைத்தியசாலையில் ஒட்சிசன் கசிவு ஏற்பட்டு 24 பேர் உயிர் இழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

அம்மாநிலத்தின் தலைநகரம் மும்பைக்கு அருகே பல்கார் மாவட்டத்தின் விரார் நகரில் விஜய் வல்லாப் என்ற தனியார் வைத்தியசாலை உள்ளது. இங்கு கொரோனாவுக்காக சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர்.

90 கொரோனா நோயாளிகள் சிக்சை பெற்று வந்தார்கள். இன்று அதிகாலை 3.15 மணிக்கு அந்த வைத்தியசாலையின் 2 ஆம் மாடியில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் திடீரென தீப்பற்றி விடுதி முழுவதும் பரவியுள்ளது. 

இச் சம்பவத்தில் 13 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிர் தப்பினார்கள்.