காதலியை கரம்பிடித்த விஸ்ணு விசால்!!
பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்த நடிகர் விஸ்ணு விசால், இன்று வியாழக்கிழமை அவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஸ்ணு விசால் தெரிவித்தார்.
கடந்த வரும் அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.