அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார்!! -நிரூபித்து ஆதாரம் வெளியிடப்பட்டது-

ஆசிரியர் - Editor II
அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார்!! -நிரூபித்து ஆதாரம் வெளியிடப்பட்டது-

திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதில் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும், என தேவஸ்தானம் முன்கூட்டியே அறிவித்தது.

அதன்படி நேற்று திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.

அதன் புத்தக பிரதியை திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக் கொண்டார்.