ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் இன்று(21) மாலை நடைபெற்றது.
பெரிய நீலாவணை பொதுமக்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் பெரியநீலாவணை கிறிஸ்தவ சபை போதகர் ஜெ.லியாஸ்கர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மத அனுஸ்டானங்களுடன் மனிதநேயமற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் போதகரினால் முன்வைக்கப்பட்டன.
மேலும் நமது நாட்டில் இதுபோன்ற துரதிஸ்ட சம்பவங்கள் இடம்பெறாது பாதுகாக்க அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் நடைபெற்றதுடன் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வுகளில் சர்வமத தலைவர்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.