சுகாதார அமைச்சர் தலமையில் அவசர கலந்துரையாடல்..! மருத்துவமனைகளை தயார்ப்படுத்தல், ஒக்ஸியன் படுக்கைகளை அதிகரித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையலாம். என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலமையில் சுகாதார அதிகாரிகளுடனான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று மாலை இ டம்பெற்றிருக்கின்றது.
குறித்த கலந்துரையாடலில் நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கும், சமூகத்தில் உள்ள தொற்ளாளர்களை அடையாளம் காண்பதற்கும் 9 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. குறித்த தீர்மானங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
01 - சிகிச்சை நிலையங்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கோவிட் நோயாளிகளுக்கு தேவையான ஒக்ஸிஜனை வழங்குதல்
02 - வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
03 - கோவிட் நோயாளிகளை நோய்த்தொற்றின் அளவின் அடிப்படையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஒரு அமைப்பை உருவாக்குதல்
04 - கோவிட் சிகிச்சைக்காக பகுதி மற்றும் மாவட்ட ரீதியில் மருத்துவமனைகளை அமைத்து அவற்றுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல்
05 - மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் மற்றும் சாதாரண நோயாளிகளுக்கு இணையான சிகிச்சையை உறுதி செய்தல்
06 - ஒரு நாளைக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைந்தது 15,000 ஆக உயர்த்தல்
07 - தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக அமுல்படுத்துதல் மற்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தல்
08 - வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மக்களுக்கு விசேட தனிமைப்படுத்தல் சட்டத்தை உருவாக்குதல்
மேற்படி முடிவுகளே குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.