வயிறு நிறைய தீவனம் உண்டும், முட்டையிடாத கோழிகள்!! -பண்ணையாளர் பொலிஸ் நிலையத்தில் விசித்திர முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
வயிறு நிறைய தீவனம் உண்டும், முட்டையிடாத கோழிகள்!! -பண்ணையாளர் பொலிஸ் நிலையத்தில் விசித்திர முறைப்பாடு-

வயிறு நிறைய தீவனம் போட்டேன், ஆனால் கோழிகள் முட்டையிடவில்லை என்று விவசாயி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் விசித்திரமான முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

புனே லோனிகால்பர் தாலுகா ஆலந்தி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இதனால் கோழிகளுக்காக அருகில் உள்ள நிறுவனத்தில் ,ருந்து கோழித்தீவனம் வாங்கி வந்தார். பின்னர் அந்த தீவனத்தை கோழிகளுக்கு போட்டு வந்தார். 

ஒருவாரம் கடந்த நிலையில் வயிறுமுட்ட சாப்பிட்ட கோழிகள் முட்டை மட்டும் போடவில்லை. இதனால் வேதனை அடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார். 

இதற்கு சரிவர பதிலளிக்காததால் சம்பவம் குறித்து அவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில், கோழித்தீவனத்தை தின்ற பின் எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

முறைப்பாட்டினை ஏற்றுக் கொண்ட பொலிஸார் கோழித்தீவன நிறுவனத்திடம் விசாரணையை ஆரம்பித்தள்ளனர்.