SuperTopAds

நாட்டு மக்களுக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரில் அதிகளவானவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு எச்சரித்துள்ளது. 

இது குறித்து பணியகம் இன்று மாலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணபடுவோர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ்கள்

அடையாளம் காணப்பட்டு அவை தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் நடந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதனால் பலனடைந்த நிலையில் மீண்டும் அதனை பின்பற்றுவது கஸ்டமான விடயமல்ல. 

கடந்த சில மாதங்களாக நாங்கள் அனுபவித்த சுதந்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதன் விளைவாக கிடைத்ததாகும். எனவே மீண்டும் ஒரு முறை இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்றுவது எமது கடமையாகும். 

இதனை சுகாதார அமைச்சின் சார்பாக நாட்டு மக்களிடம் கோருகிறோம். என கூறியுள்ளனர்.