இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 2.73 இலட்சமாக அதிகரிப்பு!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 2.73 இலட்சமாக அதிகரிப்பு!!

இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம் குறித்த அறிக்கையை இன்று திங்கட்கிழமை காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. 

இந்த தகவலின்படி அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,73,810 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று ஒரே நாளில் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 19,29,329 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 12,38,52,566 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு