இராணுவம் மீது மோதிவிட்டு தப்பி சென்ற கடத்தல்காரர்கள்..! 4 பொலிஸ் குழுக்கள் தேடுதலில், காயமடைந்த இரு இராணுவத்தினர் தொடர்ந்தும் சிகிச்சையில்..

ஆசிரியர் - Editor I
இராணுவம் மீது மோதிவிட்டு தப்பி சென்ற கடத்தல்காரர்கள்..! 4 பொலிஸ் குழுக்கள் தேடுதலில், காயமடைந்த இரு இராணுவத்தினர் தொடர்ந்தும் சிகிச்சையில்..

மரக்கடத்தல் கும்பல் இராணுவ சோதனை சாவடி மீது மோதி இரு இராணுவ சிப்பாய்களை படுகாயப்படுத்திவிட்டு தப்பி சென்றிருந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிய 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓமந்தை சோதனை சாவடியில் வாகனம் ஒன்றை சோதனையிட முயற்சித்தபோது இராணுவத்தினர் மீது மோதிய வாகனம் விபத்துக்குள்ளாகி நின்றிருந்தது. சம்பவத்தில் இரு இராணுவத்தினர் காயமடைந்ததுடன், 

வாகனத்தில் மரங்களை கடத்திவந்த இருவர் தப்பி சென்றுள்ளனர். விடயம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்தவர்கள். என அறியப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தலைமறைவாகியுள்ளனர். 

இந்நிலையில தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Radio