SuperTopAds

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மூவருக்கு தடை!! -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மூவருக்கு தடை!! -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக பதவி வகிக்க 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

குறித்த சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் ஆர்.ராதாகிருஸ்ணன் கவுரவ செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஸ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத்தலைவராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

5 ஆண்டுகளில் நேரடியாக, தமிழ் திரைப்படங்கள் தயாரிக்காத இவர்கள் மூவரும் பதவி வகிக்க தடை விதிக்கக்கோரி திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட 3 பேர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாசும், துணைத்தலைவராக கதிரேசனும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.