நீங்க எப்பவும் எனக்கு ஹீரோ தான்!! -விவேக் குறித்து உருகும் ஹிப்ஹாப் ஆதி-
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஹிப்ஹாப் ஆதி, நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவேக்கின் மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஹிப்ஹாப் ஆதி, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “நீங்க எப்பவுமே எனக்கு ஹீரோ தான்” என சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மீசைய முறுக்கு படத்தில், ஹிப்ஹாப் ஆதிக்கு தந்தையாக நடிகர் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.