விவேக் உடலுக்கு அஞ்சலி!! -பொதுமக்கள் ரசிகர்கள் முண்டியடிப்பு-

ஆசிரியர் - Editor II
விவேக் உடலுக்கு அஞ்சலி!! -பொதுமக்கள் ரசிகர்கள் முண்டியடிப்பு-

சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விவேகின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விவேகிற்கு நேற்று வெள்ளிக்கிழமை காலை திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்ட நிலையில் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சனிக்கிழமை காலை 4.35 மணியளவில் காலமானார். 59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு