SuperTopAds

குக் வித் கோமாளிகளுக்கு அடித்த அதிஸ்டம்!! -தேடி வந்த படவாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
குக் வித் கோமாளிகளுக்கு அடித்த அதிஸ்டம்!! -தேடி வந்த படவாய்ப்பு-

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான அஸ்வின், புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில், தற்போது அஸ்வின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வின் உடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.