மக்கள் எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் இலாபம் தேடத்தேவையில்லை
மக்கள் எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் இலாபம் தேடத்தேவையில்லை என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று(16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
மக்கள் எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் இலாபம் தேடத்தேவையில்லை.பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அதை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளார்கள்.அவ்விடயம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அரசாங்கம் தான்.வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும்.நாங்கள் இந்த விடயத்திற்கு எதிர்ப்பானவர்கள் அல்லர்.வீதியில் இறங்கி போராடுவதற்கான ஜனநாயக உரிமை இருக்கின்றது.அவர்களது உரிமைகளை தொழிலாளர் வர்க்கம் என்ற ரீதியில் நாம் எதிர்க்கவில்லை.
அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துடன் இருக்கின்ற வடகிழக்கு மாகாண அமைச்சர்கள் கவனமெடுத்து செயற்பட வேண்டும்.காரணம் அரசாங்கத்துடன் இணைந்து உங்களை தமிழ் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.பாராளுமன்றத்திற்கும் அனுப்பியுள்ளனர்.எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.