ஜனாசா விடயத்தில் காலங்கடந்தாவது அரசாங்கம் முஸ்லீம்களின் மனநிலையை புரிந்து கொண்டிருக்கின்றது
ஜனாசா விடயத்தில் காலங்கடந்தாவது அரசாங்கம் முஸ்லீம்களின் மனநிலையை புரிந்து கொண்டிருக்கின்றது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று(16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
கடந்த 30 வருடங்களில் தமிழ் பேசும் மக்களான முஸ்லீம் மக்களுக்கு எந்த இடத்தில் அநீதி இழைக்கப்பட்டதோ அது பேருவளையாக இருக்கலாம் அல்லது மாத்தளையாக இருக்கலாம்.இலங்கையின் எந்த மூலை முடுக்குகளிலும் இடம்பெற்றாலும் எமது தொழிற்சங்கம் தட்டிக்கேட்பவர்கள்.அரசாங்கத்தை கூட பயமில்லாமல் துணிந்து தட்டிக்கேட்பவர்கள். அரசாங்கத்தில் வடகிழக்கில் முதுகெலும்பு இல்லாத அமைச்சர்களும் இருந்தார்கள்.அவர்கள் இருந்தும் அந்த சமூதாயத்திற்கு அநியாயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.அதை தட்டி கேட்பதற்கு இவர்களுக்கு திராணி இல்லை.ஆனால் தொழிலாளர் வர்க்கமாகிய நாங்கள் இன்றுவரை முஸ்லீம் சமூகத்தினருடன் உறவாடி அவர்களது பிரச்சினைகளை இனங்கண்டு அவ்வப்போது குரல் கொடுத்து தான் வருகின்றோம்.
அவர்கள் பாதிப்படைந்த நேரத்தில் எல்லாம் குரல் கொடுத்துள்ளோம்.ஜனாசா விடயத்தில் கூறுப்போனால் கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடு நடந்தது.ஆனால் நாங்கள் ஜனாதிபதி கோத்தபாய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை ஆதரித்தவர்கள்.எனவே அவர்களை பற்றி கதைப்பதற்கு எமக்கு உரிமை இருக்கின்றது.இது ஒரு சமயம் சார்ந்த விடயமாக முஸ்லீம் சமூகத்திற்கு இருக்கின்றது.எனவே தான் காலங்கடந்தாவது அரசாங்கம் அவர்களது மனநிலையை புரிந்து கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன்.இதனை உடனடியாக தொடர்ந்து நடைமுறைப்படுத்துங்கள் என கேட்டுக்கொள்கின்றேன்.