SuperTopAds

ஒருவரை சாட்டி ஒருவராக பலரால் வன்புணரப்பட்ட 14 வயது சிறுமி!! -உறவினர்கள் கட்பட 11 பேரை கைது செய்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
ஒருவரை சாட்டி ஒருவராக பலரால் வன்புணரப்பட்ட 14 வயது சிறுமி!! -உறவினர்கள் கட்பட 11 பேரை கைது செய்த பொலிஸ்-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் உள்பட 11 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளி ஒருவருக்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த 2 மகள்களுக்கும் திருமணம் நடந்து விட்டது.

3 ஆவது மகள் (வயது 14) 6 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு அருகில் உள்ள ஒருவருடைய வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்தார். தனது அக்காவின் வீட்டில் தங்கியிருந்தபடி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் அக்காவின் கணவன் தனது வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி வெளியே சொன்னால் தனது அக்காளின் வாழ்க்கை பறிபோய் விடுமோ? என பயந்தார். இதை சாதகமாக வைத்து மீண்டும் பலமுறை அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுமட்டுமல்லாமல் அந்த சிறுமி வேலைக்கு செல்லும் வீட்டின் உரிமையாளரும் அவரை வற்புறுத்தி வன்புணர்ந்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக வேலையை இழந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வேலைக்குச் சென்ற சிறுமியை வன்புணர்ந்துள்ளார்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் மற்றும் அயலில் உள்ளவர்கள் பலரும் அந்த சிறுமியை வன்புணர்ந்துள்ளனர். இது குறித்து அச் சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பஞ்சாயாத்து தலைவரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 ஆயிரம் ரூபா பணத்தினை பஞ்சாயத்து தலைவர் வன்புணர்ந்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது குறித்து, அயலில் உள்ளவர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இது குறித:து பொலிஸாருக்கு அறிவித்தள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சிறுமியின் உறவினர்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.