SuperTopAds

நிரம்பி வழியும் பிணவறைகள்: வெளியில் போடப்படும் சடலங்கள்!! -கொரோனா பலிலால் திணறல்-

ஆசிரியர் - Editor II
நிரம்பி வழியும் பிணவறைகள்: வெளியில் போடப்படும் சடலங்கள்!! -கொரோனா பலிலால் திணறல்-

இந்தியாவின் சத்தீஸ்கரில், மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலர் பலியாவதால் ரெய்ப்பூரில் உள்ள முக்கிய அரச வைத்தியசாலையான பீம்ராவ் அம்பேத்கர் நினைவு வைத்தியசாலையில், எங்கு பார்த்தாலும் மனித உடல்களாகவே காணப்படுகிறது.

பிணவறைகளில் சடலங்களை வைக்க இடமில்லை என்பதால் தரையிலும், திறந்தவெளியிலும் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் உயிழந்தவர்களை தகனம் செய்யும் வேகத்தை விட அதிக விரைவாக இறப்புகள்

நிகழ்வதால் உடல்களை எங்கு வைப்பது என தெரியாமல் திகைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரெய்ப்பூரின் மயானங்களும் உடல்களின் வருகையால் திணறுவதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 55 உடல்கள் அங்கு தகனம் செய்யப்படுகின்றன.

சத்தீஸ்கரில் தினசரி வைரஸ் தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.