முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே-18ம் திகதி வழக்கம்போல் நினைவுகூரப்படும்..! ஒழுங்கமைப்பு குழு அறிவிப்பு..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் நடைபெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
வழக்கம்போல் மே -18ம் திகதி நடத்தப்படும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.
18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் வடகிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அன்று மாலை 6 மணிக்கு வணக்கத் தலங்களில் மணி ஒலித்து, வீடுகளில் விளக்கேற்றி அக வணக்கம் செலுத்தி கொல்லப்பட்டவர்களுக்கு
அஞ்சலி செலுத்துமாறும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு கோரியுள்ளது.