வடமாகாணம் முழுவதும் 17ம் திகதிவரை மாலை நேரங்களில் கனமழை..! யாழ்.பல்கலைக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா விளக்கம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் முழுவதும் 17ம் திகதிவரை மாலை நேரங்களில் கனமழை..! யாழ்.பல்கலைக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா விளக்கம்..

வடமாகாணம் முழுவதும் 17ம் திகதிவரை மழையுடன் கூடிய காலநிலையே நீடிக்கும் என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளரும், பிரபல காலநிலை அவதானியுமான நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வடமாகாணம் முழுவதும் பொதுவாக காலை வேளைகளில் வெப்பமான காலநிலை நிலவும். எனினும் வளிமண்டலத்தில் கீழ் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதனால் 

மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குறிப்பாக இடி, மின்னர் தொடர்பில் பொதுமக்கள் மிக விழிப்புடன் இருப்பது அவசியமானதாகும். 

இந்தக் காலப்பகுதியில் பெய்யும் மழையினை மேற்காவுகை மழை அல்லது வெப்பச் சரணமழை என அழைக்கப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு