இரவு 8 மணி தாண்டியும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்..! திட்டமிடலில் தவறா..?

ஆசிரியர் - Editor I
இரவு 8 மணி தாண்டியும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்..! திட்டமிடலில் தவறா..?

அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கு சில இடங்களில் இரவு 8 மணியை தாண்டியும் காத்திருந்ததை காண முடிந்தது. 

ஜனாதிபதியின் பணிப்பில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படுகின்றது. 

12ம், 13ம், 14ம் திகதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும்போதும் குறித்த கொடுப்பனவுகளை வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் நாளை மறுதினம் சித்திரை புதுவருடம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் தமக்கான கொடுப்பனவை பெறுவதற்கு குறிப்பாக வடமாகாணத்தில் 

சமுர்த்தி வங்கிகளில் கூட்டம் கூட்டமாக கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் வவுனியா மாவட்டத்தில் சில கிராம சேவகர் பிரிவுகளில் இரவு 8 மணி தாண்டியும்

மக்கள் கொடுப்பனவை பெறுவதற்காக காத்திருந்தனர். திடீரென கொடுப்பனவு வழங்க ஆரம்பித்தமையே அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு இடையூறை உண்டாக்கியுள்ளது

என பொதுவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு