SuperTopAds

ஐ.பி.எல். ஒளிபரப்பு மூலம் 3,800 கோடி வருமானம்!! -10 வினாடிக்கு விளம்பரத்திற்கு 14 இலட்சம்-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல். ஒளிபரப்பு மூலம் 3,800 கோடி வருமானம்!! -10 வினாடிக்கு விளம்பரத்திற்கு 14 இலட்சம்-

ஐ.பி.எல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய 16,347.5 கோடி ரூபாவிற்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா பரவல் இருந்த போதிலும் இந்த போட்டியை கடந்த வருடம் கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடத்தப்பட்டது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டிருந்தால் கிரிக்கெட் வாரியத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருந்திருக்கும். 

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய 16,347.5 கோடி ரூபாவிற்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் 3,600 கோடி ரூபா முதல் 3,800 கோடி ரூபா வரை வருமானம் கிடைக்கிறது.

அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக 13 இலட்சம் முதல் 14 இலட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.