வடமாகாண கமநலசேவை நிலையங்களில் தேடுவாரற்று கிடந்து இத்துப்போன உழவு இயந்திரங்களை வேறு மாகாணங்களுக்கு தருமாறு கோரிக்கை..! வடமாகாண அதிகாரிகளின் சாதனை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கமநலசேவை நிலையங்களில் தேடுவாரற்று கிடந்து இத்துப்போன உழவு இயந்திரங்களை வேறு மாகாணங்களுக்கு தருமாறு கோரிக்கை..! வடமாகாண அதிகாரிகளின் சாதனை..

2010ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட வடமாகாண கமநல சேவை நிலையங்களில் காட்சிக்கு விடப்பட்டிருந்த உழவு இயந்திரங்களை வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கப்படுகிறது. 

கமநல சேவை திணைக்களங்களிற்கு உட்பட்ட கமநல சேவை நிலையங்களில் பாவனையில் இல்லாத உழவு இயந்திரங்களை பிற மாவட்டங்களிற்கு வழங்கும் வகையில் உழவு இயந்திர விபரங்களை அனுப்பி வைக்குமாறு 

மாவட்ட கமநல உதவி ஆணையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் கடிதம் கமநல சேவை ஆணையாளர் நாயகத்தினால் சகல மாவட்டங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக 2010ஆம் ஆண்டு இந்திய தூதரகத்தினால் வடமாகாணத்திற்கு வழங்கிய 500 உழவு இயந்திரங்களில் அதிகமானவை தற்போது வடக்கின் 5 மாவட்டங்களிலும் பாவனை இன்றியே தரித்து நிற்கின்றன. 

பாவனை இன்றி நிற்கும் உழவு இயந்திரங்கள் வெளிமாகாணத்திற்கு செல்லும் அபாயம் காணப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம். மாவட்த்திற்கு வழங்கப்பட்ட 109 உழவு இயந்திரங்களில் 84 இயங்கு நிலையிலும்

எஞ்சிய 25 ம் திருத்த நிலையிலும் உள்ளன. இதேநேரம் திணைக்களத்தினாலும் 13 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது ( யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 13 உழவு இயந்திரம் வெளியில் வழங்கப்பட்டு விட்டது. )

கிளிநொச்சி மாவட்டத்திற்கு  வழங்கப்பட்ட100 உழவு இயந்திரங்களில் 21 உழவு இயந்திரங்கள் மட்டுமே இயங்குகிறது. ஏனைய 79 உழவு இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. 

மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட  100 உழவு இயந்திரங்களில் 39 உழவு இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளபோதும் 45 உழவு இயந்திரங்கள் பழுதான நிலையில் நிற்கும் அதே நேரம் எஞ்சிய 2 உழவு இயந்திரங்கள் 

கண்டி மாவட்டத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. வவுனியா மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 64 உழவு இயந்திரங்களில் தற்போது 60 உழவு இந்திரங்களே மாவட்டத்தில் உள்ளன. 

இந்த 60 உழவு இந்திரங்களில் 27 உழவு இந்திரங்களே இயங்குகின்றது. இதேநேரம் வெளியே வழங்கப்பட்ட உழவு இந்திரங்களில் ஒன்று இராணுவத்திற்கும் ஓன்று கண்டிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 120 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்திய அரசாங்கம் வழங்கிய உழவு இயந்திரங்களை உரிய முறையில் மக்களின் பயன்பாட்டுக்கு 

வழங்கியிருக்க முடியும். ஆனாலும் கடந்த 10 வருடங்களில் 95 வீதத்திற்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் கமலநல சேவை நிலையங்களில் துருப்பிடிக்க விட்டிருந்ததை அனைவரும் அறிவர். 

இந்நிலையிலேயே குறித்த உழவு இயந்திரங்களை மாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், எற்கனவே பல உழவு இயந்திரங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதற்கு வடக்கில் உள்ள அரச அதிகாரிகளின் மெத்தன போக்கும் பிரதான காரணமாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு