SuperTopAds

உலக உடன் பிறப்புகள் தினம் நேற்று!! -முட்டி மோதிக் கொண்ட கரன் சகோதரர்கள்-

ஆசிரியர் - Editor II
உலக உடன் பிறப்புகள் தினம் நேற்று!! -முட்டி மோதிக் கொண்ட கரன் சகோதரர்கள்-

ஐ.பி.எல் ரி-20 போட்டியில் கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களும் சகோதரர்களுமான சாம் கரனும் டாம் கரனும் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது சாம் கரன் சென்னை அணிக்காக விளையாடுகின்றார். அவரது அண்ணன் டாம் கரன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதப்பட்டது. 

ஏழாவது வீரராகக் களமிறங்கினார் சாம் கரன். ஆட்டத்தின் 17 ஆவது ஓவரை வீச வந்தது அவரது அண்ணன் டாம் கரன்.

இந்த ஓவரில் டாம் கரனின் கையே ஓங்கியிருந்தது. மூன்று பந்துகளை எதிர்கொண்ட சாம் கரன் ஒரு பவுண்டரியுடன் 5 ஓட்டங்கள் பெற்றார். மற்ற 3 பந்துகளையும் ஜடேஜா எதிர்கொண்டார். 

மீண்டும் 19 ஆவது ஓவரை வீச டாம் கரன் வந்தார். இந்த முறை அண்ணனின் பந்துவீச்சை ஒருவழி செய்ய வேண்டும் என்று காத்திருந்த சாம் கரனுக்கு முதல் பந்து ஒய்டாகவே வந்தது. 

மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு தெறிக்கவிட்டார் சாம் கரன். அடுத்த பந்திலும் சிக்ஸர். அதோடு விட்டுவைக்கவில்லை. மூன்றாவது பந்தில் பவுண்டரி. கடைசி பந்தில் ஒரு ரன் என, இந்த ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது. சாம் கரன் இந்த ஓவரில் 16 ஓட்டங்களை விளாசினார்.

நேற்று உலக உடன் பிறப்புகள் தினத்தில் இவர்கள் இருவரும் மோதிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.