SuperTopAds

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் - இரவில் தொடரும் கையெழுத்து வேட்டை

ஆசிரியர் - Editor III
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் - இரவில் தொடரும் கையெழுத்து வேட்டை

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பகுதியில்  அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை வாழ் மக்கள்  இன்று (9)   5ஆவது நாளாகவும்   அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்து வேட்டை இரவு  வேளையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்  உட்பட இளைஞர்கள் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த கையெழுத்து நிறைவு பெற்ற பின்னர் அரசாங்க அதிபர், போக்குவரத்து அமைச்சர் ,பிரதமர் ,ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இக்கெயெழுத்து போராட்டத்திற்கு பெண்கள் முதல் பெரியோர்கள் வரை ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.