SuperTopAds

4 கோடியே 30 லட்சம் தடவைகள் செலுத்தகூடிய கொரோனா தடுப்பூசி இந்தியாவிடம் கையிருப்பில் உள்ளது..!

ஆசிரியர் - Editor II
4 கோடியே 30 லட்சம் தடவைகள் செலுத்தகூடிய கொரோனா தடுப்பூசி இந்தியாவிடம் கையிருப்பில் உள்ளது..!

இந்தியாவில் 4 கோடியே 30 லட்சம் தடவைகள் செலுத்த கூடிய கொவிட் -19 தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மத்திய நலவாழ்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார். 

மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரம், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தங்களிடம் தேவையான அளவு கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளன.

இதனால் கொரோனா தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறியுள்ளன. இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன், 

கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், 4 கோடியே 30 லட்சம் முறை செலுத்தும் அளவில் கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.