SuperTopAds

3 வயது பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த கொடூர தாய்!! -குடும்ப சண்டையின் போது தந்தைக்கு குழந்தை பேசியதுதான் காரணமாம்-

ஆசிரியர் - Editor II
3 வயது பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த கொடூர தாய்!! -குடும்ப சண்டையின் போது தந்தைக்கு குழந்தை பேசியதுதான் காரணமாம்-

பெங்களூருவில் குடும்ப தகராறின் போது தந்தைக்கு ஆதரவாக பேசிய 3 வயது பெண் குழந்தையின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்படிப் பகுதியில் ஈராண்ணா, சுதா தம்பதியினருக்கு 3 வயது பெண் குழுந்தை உள்ளது.

ஈரண்ணாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினம் மதியமும் தம்பதி இடையே சண்டை உண்டானது.

பின்னர் கணவர் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது தனது குழந்தையை எடுத்து கொண்டு சுதா வெளியே சென்றுள்ளார். மாலையில் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஈரண்ணா பேசியுள்ளார்.

அப்போது பொருட்கள் வாங்குவதற்காக குழந்தையுடன் கடைக்குச் சென்றதாகவும், கடையில் வைத்து குழந்தை காணாமல் போய் விட்டதாகவும் சுதா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் நேர்ந்து தங்களது குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து, குழந்தையை காணவில்லை என்று கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகே ஒரு குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சடலத்தை மீட்ட பொலிஸார் குழந்தை காணாமல் போனதாக முறைப்பாடு செய்த தம்பதியினரை அழைத்து சடலத்தை காண்பித்தனர். இதன் போது அது தமது குழந்தைதான் என்பதை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருந்ததை அடுத்து, அக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதை பொலிஸார் உறுதி செய்தனர்.

இந்நிலையில் குழந்தையை வைத்திருந்த சுதாவை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். இதன் போது தன்னுடைய குழந்தையை தானே கொலை செய்ததை சுதா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, சுதாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவருடன் நடந்த சண்டையின் போது குழந்தை தந்தைக்கு ஆதரவாக பேசியதுடன், தாயை பைத்தியம் என்றும் பேசியுள்ளது. இதனாலேயே சுதா தனது குழந்தையின் கழுத்தை துப்பட்டால் ,றுக்கி சுதா கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.