அடுத்த 4 வாரங்களும் மிகவும் ஆபத்தானவை!! -இந்திய மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
அடுத்த 4 வாரங்களும் மிகவும் ஆபத்தானவை!! -இந்திய மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை-

கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிப்பால் அடுத்த 4 வாரங்களும் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்செரிக்கை செய்துள்ளது. 

செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே மத்திய சுகாதாரத்துறையினரால் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- 

கொரோனாவின் 2 ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது. இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். 

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம் என்றார். 


Radio