என்ன தைரியம் இவருக்கு!! -சைக்கிளில் வந்த விஜய்யை புகழும் பிரபல நடிகர்-

ஆசிரியர் - Editor II
என்ன தைரியம் இவருக்கு!! -சைக்கிளில் வந்த விஜய்யை புகழும் பிரபல நடிகர்-

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் இளையதளபதி விஜய்யை “என்ன தைரியம் இவருக்கு” என்று பிரபல நடிகர் ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். 

இன்று நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தனது வாக்கினை செலுத்துவதற்கு இளையதளபதி நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். 

இந்நிலையில் நடிகர் சாந்தனு, விஜய் சைக்கிளில் வரும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன தைரியம் இவருக்கு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


Radio