தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்!! -பிரச்சாரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது-

ஆசிரியர் - Editor II
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்!! -பிரச்சாரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது-

கடந்த 25 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பான நடைபெற்றுவந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 7.00 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன.

234 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வைகயில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளது.

234 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் களத்தில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர் இருவரும் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் சரி பாதி எண்ணிக்கையில் 117 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.