வெள்ள நீரை விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வாரப்பட்டு வருகின்றன
வெள்ள நீரை விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வாரப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய நீர்பாசன திணைக்களத்தினால் கரவாகு வட்டை குளம் கனரக வாகனத்தின் உதவியுடன் தூர்வாரப்பட்டு வருகின்றன.
இச்செயற்பாட்டினை தற்போது நீர்ப்பாசன திணைக்களம் மேற்கொண்டுள்ளதுடன் குளத்தில் காணப்படும் ஆற்றுவாழைகள் இதர தாவரங்கள் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் நாவிதன்வெளி பிரதேசம் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை சம்மாந்துறை பகுதிகளிலும் இவ்வாறான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான குளங்களை நம்பி கல்முனைப் பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள இறைவெளிக்கண்டம், கல்முனைக்கண்டம், பண்டிதீவு கண்டம் ஆகிய கண்டங்களில் சுமார் 1700 ஏக்கர் நெற்காணிகள் உள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் எண்ணக்கருவில் உதயமான 5000 குளங்களை புனரமைக்கும் செயல்திட்டத்தினை நாடுபூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்திற்கமைய இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.