SuperTopAds

ஊடகத்துறையினரை ஒருமையில் விழித்துப் பேசிய உதயநிதி!!

ஆசிரியர் - Editor II
ஊடகத்துறையினரை ஒருமையில் விழித்துப் பேசிய உதயநிதி!!

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க இளைஞரணி செயலர் ஊடகத்துறையினரை ஒருமையில் விழித்துப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில்:- 

லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தலிலும், தி.மு.க வை வெற்றி பெற வைக்க வேண்டும். அனைத்து தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் கருத்து கணிப்பு போட்டுட்டான். 180 இடங்களில், தி.மு.க வெற்றி பெறும் என, சொல்லிட்டான்.

ஜெயலலிதா இறந்த பின், சசிகலாவின் காலை பிடித்து, பழனிசாமி முதல்வராக வந்துவிட்டார். இடைப்பாடி தொகுதியில், அவர் வெற்றி பெறமாட்டார். தேர்தல் முடிந்ததும், அவர், அமைச்சர்கள், சிறைக்கு செல்வது உறுதி. ஜெயலலிதா மர்ம மரணத்தை, தி.மு.க., விசாரணை நடத்தும் என்றார்.