SuperTopAds

காதல் சின்னம் தாஜ்மகாலின் கதவுகள் 6 மாதங்களுக்கு பின் திறப்பு!!

ஆசிரியர் - Editor II
காதல் சின்னம் தாஜ்மகாலின் கதவுகள் 6 மாதங்களுக்கு பின் திறப்பு!!

ஆறு மாதகாலமாக கொரோனா தொற்று அச்சத்தால் பூட்டப்பட்ட தாஜ்மகால் மீண்டும் கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தாஜ்மகாலினை பார்வையிட ஒரு நாளிற்கு 5,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். ஆயினும் கொரோனா பீதி காரணமாக அங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 

6 மாதங்களாக வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தாலும் முறையாக பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.