கொரோனா தொற்றுநோய் தொடர்பில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் கலைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பொதுமக்கள் மாணவர்கள் கலைஞர்களுக்கான தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று(31) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமை தாங்கியதுடன் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கொரோனா அனர்த்தத்திற்கு எவ்வாறு முகம் கொடுப்பது பாராம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் பண்பாட்டு மருந்துகளை கையாளும் முறை என்பன விரிவாக ஆராயப்பட்டு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.